தமிழகம் முக்கியச் செய்திகள்

அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியே வர வேண்டும்: தமிழக அரசு

அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியே வர வேண்டும் என பொதுமக்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. 

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே உள்ளது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.  கொரோனா தடுப்பூசி போடும் பணியும் முழு வீச்சில்  நடைபெற்று வருகிறது. இன்றைய நிலவரப்படி தமிழகத்தில்  6,711 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 19 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் மட்டும் 2105 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. 

இந்த நிலையில் மீண்டும் கொரோனா  தொற்று அதிகரிப்பதை தடுக்க  முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மருத்துவ வல்லுநர் குழுவுடன் கலந்தாய்வு கூட்டம் இன்று நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பல முக்கிய அறிவுறுத்தல்கள் சுகாதாரத் துறையினருக்கு வழங்கப்பட்டுள்ளது. 

அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே வர வேண்டும் என தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.  வீட்டை விட்டு வெளியே வரும் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும், தனி மனித இடைவெளியை (6 அடி இடைவெளி) கடைபிடிக்க வேண்டும், முறையாக சோப்பு போட்டு, அடிக்கடி கைகளை கழுவ வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

 திருமணங்களில் 100 நபர்கள் மற்றும் துக்க நிகழ்வுகளில் 50 நபர்களுக்கு மிகாமல், வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் எனவும், நோய்த் தொற்று பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டுமெனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. 

Advertisement:

Related posts

7 உட்பிரிவுகளை உள்ளடக்கி தேவேந்திரகுல வேளாளர் என ஒரே பெயரில் அழைப்பதற்கான பரிந்துரை குறித்து முதல்வர் அறிவிப்பு!

Saravana

அண்ணா நினைவிடத்தில் முதல்வர் பழனிசாமி அஞ்சலி!

Jeba

இங்கிலாந்தை மிரட்டும் புதிய வகை கொரோனா வைரஸ்; லண்டனில் கடுமையான ஊரடங்கு அமல்!

Jayapriya