தமிழகம் முக்கியச் செய்திகள்

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 3,672 பேருக்கு கொரோனா!

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 3,672 பேருக்கு கொரோனா பாதிப்பு!

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் முழுவதும் 3,672 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இன்று பாதிக்கப்பட்ட 3,672ல் 2,196 பேர் ஆண்களும், 1,476 பெண்களும் உள்ளடங்கியுள்ளனர். இதன் காரணமாக ஒட்டு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 9,03,479 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல கடந்த 24 மணிநேரத்தில் 11 பேர் தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த உயிரிழப்பானது 12,789 ஆக அதிகரித்துள்ளது.

புதிய பாதிப்புகள் ஒருபுறம் இருக்க கடந்த 24 மணி நேரத்தில் 1,842 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கையானது 8,66,913 ஆக அதிகரித்துள்ளது. தமிழகம் முழுவதும் 260 மையங்களில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இதில் 69 அரசும், 191 தனியார் மையங்களும் அடங்கும்.

இதுவரை மாநிலம் முழுவதும் 1,96,85,598 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 79,442 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது என மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Advertisement:

Related posts

நீட் தொடர்பான வீடியோவை நான் பதிவிடவில்லை: அமைச்சர் க.பாண்டியராஜன் மறுப்பு

Gayathri Venkatesan

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் 49 சதவீதம் பேர் உயர்கல்வி படித்துள்ளனர்: கே.பி.அன்பழகன்!

Karthick

ஹோட்டலில் உபசரிப்பு சரிவர இல்லாததால் ஊழியர்களுக்கு அரிவாள் வெட்டு!

Jayapriya