தமிழகம் முக்கியச் செய்திகள்

தமிழகத்தில் 5 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு..

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்தது.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கடந்த ஒரு வாரமாக படிப்படியாக அதிகரித்து வருகிறது. தற்போது இதன் பரவலை கட்டுப்படுத்த தமிழக சுகாதாரத்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. குறிப்பாக சென்னையில் கொரோனா கட்டுப்பாடுகளை மாநகராட்சி தீவிரப்படுத்தியுள்ளது.

இந்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த தகவலை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில், 5,441 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 9,20,827 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், தொற்றுக்கு 23 பேர் பலியானதையடுத்து மொத்தமாக தொற்றுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12,863 ஆக உயர்ந்துள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மேலும், இன்று 1,890 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியதால் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 8,47,305 ஆக அதிகரித்துள்ளது.

Advertisement:

Related posts

வரும் சட்டப்பேரவைத் தேர்தலுடன் கமல்ஹாசன் தடம் தெரியாமல் போய் விடுவார்: அமைச்சர் கடம்பூர் ராஜூ

Saravana

கொரோனா சிகிச்சை மையத்தில் ஏற்பட்ட தீ விபத்து: 12 பேர் உயிரிழப்பு!

Ezhilarasan

ரஜினிக்கு ‘தலைவா’ என மோடி ட்வீட், முதல்வர் வாழ்த்து!

L.Renuga Devi