தமிழகம் முக்கியச் செய்திகள்

தமிழகத்தில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா; இன்று ஒரேநாளில் 3,581 பேர் பாதிப்பு!

தமிழகத்தில் இன்று 3,581 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பான தகவலை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

அதன்படி, தமிழகத்தில் இன்று 3,581 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 99 ஆயிரத்து 807 ஆக அதிகரித்துள்ளது. மேலும், இன்று ஒரே நாளில் 1,817 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால், கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 65 ஆயிரத்து 071 ஆக உயர்ந்துள்ளது என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தற்போது 21,958 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று ஒரே நாளில் 14 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதனால் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 12 ஆயிரத்து 778 ஆக அதிகரித்துள்ளது.

Advertisement:

Related posts

கொரோனா 2-வது அலையைத் தடுக்க முடியாது!

Ezhilarasan

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு: எருமை மாடுகளுடன் ஊர்வலம் சென்ற விவசாயிகள்!

Jeba

நெற்றின் அளவை குறைத்த மாடல்!

L.Renuga Devi