தமிழகம் முக்கியச் செய்திகள்

நாளை வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்!

பொதுதுறை வங்கிகளை தனியார்மயமாக்கும் மத்திய அரசின் முடிவை எதிர்த்து நாளை மற்றும் மறுநாள் (மார்ச் 15,16) ஆகிய இரண்டு நாட்கள் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

வங்கி ஊழியர்களின் இந்த 2 நாள் வேலை நிறுத்தத்திற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என அனைத்து வங்கி ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர். .

இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அனைத்து வங்கி ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் கிருபாகரன்,“ இரண்டு பொதுத்துறை வங்கிகள் மற்றும் ஒரு காப்பீட்டு நிறுவனத்தையும், தனியார் மயமாக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவித்தார். மத்திய அரசின் இந்த முடிவால் வங்கி ஊழியர்களுக்கு மட்டுமல்லாமல் பொதுமக்களுக்கும் நாட்டின் பொருளாதாரத்திற்கும் பாதிப்பு ஏற்படும். பொதுத்துறை வங்கிகள் தனியார் மயமாக்கப்பட்டால் நாட்டின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் எனவே மத்திய அரசு தமது முடிவை திரும்பப் பெற வேண்டும் என்றும் தெரிவித்தார்.

Advertisement:

Related posts

”விவசாயிகள் போராட்டத்திற்கும், அரசியல் கட்சிகளுக்கும் தொடர்பு இல்லை”- பிரதமருக்கு விவசாயிகள் கடிதம்!

Jayapriya

மக்கள் நீதி மய்யத்திற்கு மீண்டும் டார்ச் லைட் சின்னத்தை ஒதுக்கியது தேர்தல் ஆணையம்!

Saravana

திமுக தலைவர் ஸ்டாலின் இன்று நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு!

Gayathri Venkatesan