தமிழகம் முக்கியச் செய்திகள்

இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல்: எழும் எதிர்பார்ப்பு!

2021-22 நிதியாண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையை பேரவையில் நிதி அமைச்சரும் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்கிறார்.


15-வது சட்டப் பேரவையின் பதவிக்காலம் வரும் மே மாதம் 24ம் தேதியுடன் நிறைவடைகிறது. சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளவுள்ள நிலையில், 2021-22 நிதியாண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையை, நிதி அமைச்சரும் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்கிறார்.

ஓமந்தூரார் அரசினர் தோட்டம் கலைவாணர் அரங்கில் இன்று காலை 11 மணிக்கு பேரவை கூடுகிறது. தேர்தலுக்கு முன்னதாக தாக்கல் செய்யப்படவுள்ள இடைக்கால நிதிநிலை அறிக்கையில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே, சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடரில் கூட்டுறவு வங்கிகளில் 16 லட்சத்து 43 ஆயிரம் விவசாயிகள் பெற்ற ரூ.12,110 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி என முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட் தாக்கல் செய்த பிறகு, பேரவை அலுவல் ஆய்வுக்குழு கூடி, எத்தனை நாட்கள் கூட்டத்தை நடத்துவது என்று முடிவு செய்யும். பிப்ரவரி 25ம் தேதி முதல் 27ம் தேதி வரை 3 நாட்கள் கூட்டம் நடைபெறும் என்று தெரிகிறது.

பட்ஜெட் கூட்டத் தொடரில் திமுக உள்ளிட்ட அதன் கூட்டணிக் கட்சிகள் பங்கேற்றால் தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மீதான ஊழல் பட்டியலை ஆளுநரிடம் வழங்கியது, நீட் தேர்வு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு, மாநில உரிமைகள் பறிப்பு உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்பும். இந்த ஆட்சியின் கடைசி கூட்டத் தொடர் என்பதால் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பங்கேற்கும் என்று கூறப்படுகிறது.

Advertisement:

Related posts

”தமிழகத்தில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துவிட்டது”- கனிமொழி!

Jayapriya

சசிகலா சிறையிலிருந்து வெளியில் வராமல் இருக்க சதி நடக்கிறது- கே.பாலகிருஷ்ணன்!

Jayapriya

பொதுத்தேர்தல் அட்டவணை வந்த பின்னரே தேர்வு குறித்து அறிவிக்கப்படும்! – அமைச்சர் செங்கோட்டையன்

Nandhakumar