தமிழகம் முக்கியச் செய்திகள்

அதிகரிக்கும் கொரோனா; 12ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வு!

 தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

தமிழகத்தில் கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து கொரோனா பரவல்  மீண்டும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டு 9,10, 11 மாணவர்களுக்கு ஆல் பாஸ் அறிவித்தார் முதல்வர் பழனிசாமி. அதனைத் தொடர்ந்து விடுமுறை அளிக்கப்பட்டு ஆன்லைன் மூலம் வகுப்பு நடத்த அறிவுறுத்தப்பட்டது. 

எனினும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டு, பள்ளிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன. நேற்று ஒரே நாளில் மட்டும் 4,276 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.  இதனிடையே பொதுத் தேர்வை நடத்த முடியுமா என்பது குறித்து கல்வித் துறை அதிகாரிகள் நேற்று ஆலோசனை மேற்கொண்டனர். 

இந்த நிலையில் கொரோனா பரவல் தொடர்ச்சியாக அதிகரிக்கும் சூழலிலும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தேர்வுத் துறை அறிவித்துள்ளது. அதன்படி, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்கள் தேர்வு எழுத அனுமதி இல்லை, தொற்று பாதிப்புள்ள மாணவர்கள் வேறொரு நாளில் எழுத வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 ஒவ்வொரு மாணவருக்கும் தனித்தனி இட வசதி உறுதி செய்யப்பட வேண்டும் எனவும், வாயால் உறிஞ்சி இழுக்க வேண்டும் என்பதால் பிப்பெட்டை பயன்படுத்தக் கூடாது என்றும், ஆய்வகம், ஆய்வக பொருட்களை கிருமி நாசினி கொண்டு அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆசிரியர்கள், மாணவர்கள் கட்டாயமாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டுமெனவும் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. வரும் 16ம் தேதி முதல் செய்முறைத் தேர்வு நடைபெற உள்ள நிலையில், வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.  

Advertisement:

Related posts

பிரான்ஸில் டைட்டனோசரின் கால்தடங்கள் கண்டுபிடிப்பு!

Jayapriya

தூத்துக்குடி சிப்காட் பகுதியில் பயங்கர தீ விபத்து!

Ezhilarasan

அதி வேகமாக வந்த லாரியால் நிகழ்ந்த கோர விபத்து – 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!

Nandhakumar