இந்தியா செய்திகள் முக்கியச் செய்திகள்

“தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் முன்வர வேண்டும்” – தமிழிசை சவுந்தரராஜன்

கொரோனா தடுப்பூசி போடுவதில் புதுச்சேரி மாநில முதன்மை மாநிலமாக இருக்க வேண்டும், நாம் அதிகப்படியாக தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வர வேண்டும் என துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி துணைநிலை ஆளுநராக பொறுப்பேற்ற தமிழிசை சௌந்தரராஜன் முதல்முறையாக கதிர்காமம் பகுதியில் உள்ள இந்திரா காந்தி அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவத் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு ஊசி மையத்தை ஆய்வு செய்தார். அங்கு கொரோனா தடுப்பு ஊசி செலுத்துவதை பார்வையிட்ட அவர் இந்த மையத்தில் மிகக்குறைவாக தடுப்பூசி செலுத்தப்படுகிறது இங்கு அதிக மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்த.

பின்பு அங்கு கூடியிருந்த மருத்துவமனை பணியாளர்கள் மற்றும் மருத்துவ மாணவ மாணவிகளுடன் கருத்தரங்க கூடத்தில் உரையாற்றினார். அப்போது அவர் பேசும்போது, நம் நாட்டிலேயே கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசி தற்போது உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் வழங்கப்பட்டு வருகிறது எனத் தெரிவித்தார்.

பல்வேறு சோதனைகள் செய்யப்பட்டு கொரோனா தடுப்பூசி மிக சீக்கிரமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றும் நாம் தற்போது கொரோனோ நோயோடுதான் வாழ்ந்து வருகிறோம் அதனால் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

சுகாதார ஊழியர்கள் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்பதால் அனைவரும் தடுப்பூசி எடுத்துக்கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனக் கூறிய அவர் தடுப்பூசி போடுவதில் புதுச்சேரி முதன்மை மாநிலமாக இருக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து அதிகாரிகள் மற்றும் மருத்துவத்துறை அதிகாரிகள் மற்றும் மருத்துவர்களுக்கு கொரோன தடுப்பூசி விழிப்புணர்வை அதிகப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினார். பின்னர் அவர் வெளியேறும்போது மருத்துவமனையில் பணியாற்றும் ஊழியர்கள் தங்களது குறைவான சம்பளத்தை அதிகரிக்க வலியுறுத்தி மனு அளித்தனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

Advertisement:

Related posts

ராகுல் காந்தி தமிழக வருகை: பிரச்சார தேதிகள் அறிவிப்பு!

Saravana

நக்சலைட்டுகள் ஒழிப்பு பிரிவில் முதன்முதலாக பெண்கள் சேர்ப்பு..

Jayapriya

“சமூக வலைதளத்தை தவறாக பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை!” – மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்

Jeba