செய்திகள் தமிழகம் தேர்தல் 2021 முக்கியச் செய்திகள்

பழங்குடியினருக்கு வீடு கட்டித் தரப்படும் – வேல்முருகன்

பண்ருட்டி தொகுதியில் பழங்குடியின மக்களுக்கு வீடுகள் கட்டித் தரப்படும், என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் உறுதி அளித்துள்ளார்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி தொகுதியில், திமுக கூட்டணி சார்பில், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் போட்டியிடுகிறார்.

இந்நிலையில் இன்று பண்ருட்டி சுற்று வட்டாரப் பகுதிகளில் 7-வது நாளாக தீவிர பரப்புரையில் ஈடுபட்டார். பண்ருட்டி, மேல்பட்டம்பாக்கம், பி.என். பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருடன் கூட்டணி கட்சி தொண்டர்கள் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

பின்னர் மேல் பட்டம்பாக்கம் ரவுண்டானத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு வேல்முருகன் மாலை அணிவித்தார். அதைத் தொடர்ந்து பேசிய அவர், அப்பகுதியில் அதிகமாக வசிக்கும் பழங்குடியின மக்கள் நலன் கருதி, தாம் வெற்றி பெற்றவுடன் அந்த மக்களுக்கு அனைத்து வசதிகளும் மேம்படுத்துவதோடு அவர்களுக்கு அரசு வீடு கட்டி தரப்படும் என்றும் வாக்குறுதி அளித்தார்.

Advertisement:

Related posts

அதிரடியாக உயரும் உள்நாட்டு விமான கட்டணம்!

Jayapriya

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை எனில் சம்பளம் கட்..

Jayapriya

பாஜக இந்துத்துவ கொள்கையை திணிக்க முயற்சிக்கிறது : விஜய் வசந்த்!

Karthick