நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் தமிழகத்தின் முதல் பயோ கேஸ் பயணிகள் பேருந்து இயக்கப்பட்டது.
தமிழகத்தில் முதல் முறையாக நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பயோ கேஸ் என்று கூறப்படும் இயற்கை எரிவாயு சிலிண்டர் பொருத்தப்பட்டு தனியார் பயணிகள் பேருந்து இயக்கப்பட்டது.
நாட்டில் டீசல் லிட்டர் 87 ரூபாயாகவும், பெட்ரோல் லிட்டர் ரூ. 91 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், சி.என்.ஜி கேஸ் ரூ.56க்குதான் விற்கப்படுகிறது. மைலேஜ் இரண்டும் ஒரே அளவுதான் கிடைக்கிறது.
இதனால், 40 சதவீதம் வரை செலவு சி.என்.ஜி கேஸில் மிச்சமாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால் தற்போதுள்ள போக்குவரத்து வாகனங்களில் சிறியளவு வடிவமைப்பை மாற்றினால், பயோ கேஸை பயன்படுத்தி வாகனங்களை இயக்க முடியும் எனக் கூறப்படுகிறது. தற்போதுவரை தனியார் பேருந்து சோதனை ஓட்டம் மட்டுமே முடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisement: