செய்திகள் தமிழகம் முக்கியச் செய்திகள்

ஒரே நாளில் 2 ஆயிரத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு!

கொரோனா வைரஸ் தொற்றால் இன்று 1,971 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் நோய்த்தொற்றில் இருந்து 1,131 பேர் குணமடைந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் இன்று 84,676 நபர்களுக்கு நடப்பட்ட கொரோனா பரிசோதனையில் 1,971 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 8,75,190 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்று சிகிச்சைப் பலனின்றி ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர்.

நோய்த்தொற்றிலிருந்து சிகிச்சைப் பெற்று குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,131ஆக பதிவாகியிருக்கிறது. தொற்று பாதிப்பால் தற்போது வரை சிகிச்சைப் பெற்று வருபவர்களின் மொத்த எண்ணிக்கை 11,318 ஆக உள்ளது.

சென்னையில் மட்டும் 739 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மூன்று பேர் உயிரிழந்துள்ளார். வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் உட்பட மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 4,416 ஆக உள்ளது. சென்னையை அடுத்தப்படியாக செங்கல்பட்டில் 205 பேருக்கும் கோவையில் 173 பேருக்கும் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Advertisement:

Related posts

மியான்மர் போராட்டம்: 4 பேர் உயிரிழப்பு

Niruban Chakkaaravarthi

உத்தரகாண்ட் வெள்ளப்பெருக்கு: 170 பேர் மாயம், 19 பேர் உயிரிழப்பு!

Jayapriya

’அரசியலுக்கு வர முடியவில்லை’- நடிகர் ரஜினிகாந்த் அறிவிப்பு!

Jayapriya