செய்திகள் தமிழகம் முக்கியச் செய்திகள்

தமிழகத்தில் 4 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு

கொரோனா வைரஸ் தொற்றால் இன்று ஒரே நாளில் 4,276 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நோய்த்தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 19ஆக பதிவாகிவுள்ளது.

தமிழ்நாட்டில் இன்று 84,658 நபர்களுக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் 4,276 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 9,15,386 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்று மட்டும் சிகிச்சைப் பலனின்றி 19 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழப்பின் மொத்த எண்ணிக்கை 12,840 ஆக உயிர்ந்துள்ளது.

கொரோனா தொற்றிலிருந்து சிகிச்சைப் பெற்று குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,869 ஆக உள்ளது. தொற்று பாதிப்பால் தற்போது வரை சிகிச்சைப் பெற்று வருபவர்களின் மொத்த எண்ணிக்கை 30,131 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் மட்டும் 1,520 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், ஆறு பேர் உயிரிழந்துள்ளார். வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் உட்பட மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 11,633ஆக அதிகரித்துள்ளது. சென்னையை அடுத்தப்படியாக உள்ள கோவையில் 427 பேருக்கும் செங்கல்பட்டில் 398 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

Advertisement:

Related posts

தென் தமிழகம் மற்றும் உள் மாவட்டங்களில் மிதமான மழை!

Karthick

அஸ்வினுக்கு நன்றி தெரிவித்த மோகன் லால்!

Ezhilarasan

தன் உயிரை பொருட்படுத்தாமல் தீப்பற்றிய காரிலிருந்த 3 பேரைக் காப்பாற்றிய காவலர்!

Gayathri Venkatesan