தமிழகம் முக்கியச் செய்திகள்

தமிழகத்தில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்பு!

தமிழகத்தில் தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் ஒரே நாளில் 21,228 பேருக்குப் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 12,49,292 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 2,28,30,992 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்றைய தினத்தில் கொரோனா சிகிச்சை முடிந்து 19,112  பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன்மூலம் இதுவரை கொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்புவோரின் எண்ணிக்கை 11,09,450 ஆக உள்ளது.

ஒரே நாளில் 144 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14,612 ஆக உள்ளது. சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 6228 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் சென்னையில் மட்டும் இதுவரை 3,58,573 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement:

Related posts

அதிமுக அமமுக இணைப்பு குறித்து பா.ஜ.க எல் முருகன் கருத்து

Jeba

ரோஹிங்கியா அகதிகள் விவகாரம்; உத்தரவை திரும்பபெற்ற மணிப்பூர் அரசு

L.Renuga Devi

அதிமுக ஆட்சிக்கு மக்கள் மட்டுமல்லாமல் இயற்கையும் சாதகமாக இருக்கிறது: முதல்வர்!

Karthick