செய்திகள் தமிழகம் முக்கியச் செய்திகள்

போக்குவரத்து தொழிலாளர்களின் காலவரையற்ற போராட்டம் இன்று தொடங்கியது!

போக்குவரத்து தொழிலாளர்களின் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் திட்டமிட்டபடி இன்று தமிழ்நாடு முழுவதும் தொடங்கி நடைபெற்று வருகிறது.

போக்குவரத்து ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை வழங்க வலியுறுத்தி தொமுச, சிஐடியு உள்ளிட்ட ஒன்பது சங்கங்கள் இன்று தமிழகம் முழுவதும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

தமிழ்நாடு முழுவதும் போக்குவரத்து ஊழியர்களின் லேவை நிறுத்தத்தால் பேருந்துகள் இயக்கம் பெருவாரியாக குறைந்துள்ளது. சென்னையில் மட்டும் 50 சதவீதம் பேருந்துகள் மட்டும் இயக்கப்படுகிறது. ஊழியர்களின் வேலை நிறுத்த காரணமாக சென்னை பல்லவன் இல்லம் அருகே காவல்துறை பாதுகாப்பு அதிகரித்துள்ளது.

வேலை நிறுத்து எதிரொலியால் மதுரையில் 15 சதவீதமும் சேலத்தில் 60 சதவீதமும் மட்டும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. பேருந்து நிலையங்களில் நீண்ட நேரம் காத்திருப்பதால் மக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

பேச்சுவார்த்தை முடியும் வரை போக்குவரத்து ஊழியர்களுக்கு இடைக்கால நிவாரண தொகையாக மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் நேற்று அறிவித்தார்.

மேலும், போராட்டத்தைக் கைவிடுமாறும் அவர் வலியுறுத்தினார். இந்நிலையில், இடைக்கால நிவாரண தொகை வழங்குவதாக கூறிய அமைச்சரின் முடிவை தொழிலாளர்கள் தரப்பில் ஏற்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:

Related posts

அதிமுகவிற்காக களமிறங்கிய கார்த்திக்!

Niruban Chakkaaravarthi

“ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்ததை நினைத்து, திமுகவிற்கு தோல்வி பயம் வந்துவிட்டது” – அமைச்சர் கடம்பூர் ராஜூ

Jeba

தனது அறுவை சிகிச்சைக்காக ஜூஸ் விற்று நிதி திரட்டும் அமெரிக்க சிறுமி!

Gayathri Venkatesan