உலகம்

ஆப்கானிஸ்தானில் பேருந்தில் சென்ற 45 பயணிகளை கடத்திய தலிபான் பயங்கரவாதிகள்!

ஆப்கானிஸ்தானில் பேருந்தில் சென்றுகொண்டிருந்த 45 பயணிகளை தலிபான் பயங்கரவாதிகள் கடத்தி சென்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெற்காசியாவில் பயங்கரவாத அச்சுறுத்தல்கள் அதிகம் உள்ள நாடுகளில் ஆப்கானிஸ்தானும் ஒன்று. இங்கு தலிபான்கள் மற்றும் ஐஎஸ் பயங்கரவாத அமைப்புகளால் அவ்வப்போது அப்பாவி மக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். இதனை அடுத்து பயங்கரவாதிகளை ஒடுக்க ஆப்கானிஸ்தான் ராணுவம் தலிபான் பயங்கரவாதிகளுடன் போரிட்டு வந்தது. சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேல் நடைபெற்ற போர், அமைதி ஒப்பந்தம் காரணமாக முடிவுக்கு வந்தது. அமெரிக்காவின் மத்தியஸ்தத்தினால் இரு தரப்பினருக்கும் இடையேயான போர் நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் அமைதி ஒப்பந்தங்களை மீறியும் அங்கு பயங்கரவாத சம்பவங்கள் அறங்கேறி வருகின்றன.

இந்நிலையில் அந்நாட்டின் மேற்கு மாகாணத்தில் உள்ள சைலோக்தரன் நகரில் சென்று கொண்டிருந்த பேருந்தில் இருந்த 45 பயணிகளை தலிபான் பயங்கரவாதிகள் கடத்திச் சென்றுள்ள சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை 7 மணிக்கு டேரத்- டர்ஹுண்டி சாலையில் சென்றுகொண்டிருந்த பேருந்தை வழிமறித்த துப்பாக்கி ஏந்திய தலிபான் பயங்கரவாதிகள் பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரையும் கடத்தி சென்றுள்ளனர். இதனை அடுத்து ஆந்நாட்டு அரசு பயணிகளை மீட்கும் பணியை தீவிரப்படுத்தியுள்ளது. ஆனால் இந்த சம்பவம் தலிபான் அமைப்பு இதுவரை பொறுப்பேற்கவில்லை என கூறப்படுகிறது.

Advertisement:

Related posts

பாகிஸ்தானில் லேண்ட் க்ரூஸர் கார் ஓட்டும் 5 வயது சிறுவன்; வைரல் வீடியோ

Jeba

அடுத்த ஆண்டு முதல் ஏழை நாடுகளுக்கு கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து; உலக சுகாதார அமைப்பு தகவல்!

Saravana

பின்னோக்கி செல்லும் முதுமை; ஆராய்ச்சியாளர்களின் அரிய கண்டுபிடிப்பு!

Nandhakumar

Leave a Comment