உலகம்

“கொரோனா தோற்றம் குறித்து அறிந்து கொள்ள சில ஆண்டுகள் ஆகலாம்..” – WHO

கொரோனா தோற்றம் குறித்து அறிந்து கொள்ள சில ஆண்டுகள் ஆகலாம் என உலக சுகாதார அமைப்பின் நிபுணர் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

சீனாவின் வூஹான் பகுதியில் கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, உலகம் முழுவதும் பரவிய அந்த வைரஸின் கோரப்பிடியில் வல்லரசு நாடுகளில் ஒன்றான அமெரிக்கா சிக்கி வெளிவர முடியாமல் தவித்து வருகிறது. மேலும், இந்தியா உட்பட பிற நாடுகளும் கொரோனாவுக்கு எதிரான போரில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன.

முன்னதாக அமெரிக்காவில் கொரோனா அதிவிரைவாக பரவிய சமயத்தில் சீனாதான் கொரோனா வைரஸை உற்பத்தி செய்து உலகம் முழுவதும் பரப்பியது என முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டினார். அத்துடன் உலக சுகாதார அமைப்பு சீனாவுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாக கூறி உலக சுகாதார அமைப்புக்கு அமெரிக்கா அளித்து வந்த நிதியை அவர் நிறுத்தி வைத்தார்.

இதைத்தொடர்ந்து சீனாவில் கொரோனா உருவானது எப்படி என்ற ஆராய்ச்சியை விரைவில் மேற்கொள்வோம் என உலக சுகாதார அமைப்பு அறிவித்தது. ஆனால், அதற்கு சீனா சம்மதம் தெரிவிக்காமல் மறுத்து வந்தது. பின்னர் பலகட்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர் வூஹானில் ஆராய்ச்சி மேற்கொள்ள உலக சுகாதார அமைப்புக்கு சீனா அனுமதி வழங்கியது. இந்நிலையில், கடந்த வார இறுதியில், உலக சுகாதார அமைப்பு அதிகாரிகள் வூஹானில் ஆராய்ச்சியை துவக்கினர். முதலில் இவர்கள் அங்குள்ள ஆய்வகங்கள், இறைச்சி சந்தை உள்ளிட்டவற்றில் சோதனை மேற்கொண்டனர். அத்துடன் கொரோனாவால் ஆரம்பத்தில் பாதிக்கப்பட்டவர்களிடமும் விசாரணை நடத்தினர். இந்தநிலையில், ”கொரோனா வைரஸின் தோற்றம் குறித்து கண்டறிய இன்னும் சில ஆண்டுகள் ஆகும், என உலக சுகாதார அமைப்பின் நிபுணர் குழு தெரிவித்துள்ளது.

Advertisement:

Related posts

இஸ்ரேலில் முதல் நபராக கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு!

Jayapriya

மகளின் படுக்கை அறையை எட்டிப் பார்த்த இளைஞனை விரட்டிப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த தாய்!

Jayapriya

உருவாகிய இடத்திற்கே திரும்பிய வைரஸ்; சீனாவிலும் பரவியது புதிய வகை கொரோனா தொற்று!

Saravana

Leave a Comment