அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கோவில்பட்டியில் தனது இறுதிக்கட்ட பரப்புரையை இன்று மேற்கொண்டு வருகிறார்.
வருகின்ற ஏப்ரல் 6 ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்கவிருக்கிறது. இந்நிலையில் இன்றோடு அரசியல் கட்சியினர் தங்களது பரப்புரையை முடித்துகொள்ள வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. இதனால் இன்று மாலை 7 மணியோடு அனைத்து அரசியல் கட்சியினரும் தங்களது பரப்புரையை முடித்துகொள்வர். மே 2 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படுகிறது.
இந்நிலையில் அமமுக சார்பில் கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடும் டிடிவி தினகரன் இறுதிக்கட்ட தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். அப்போது அவர் பேசுகையில்’ நான் வெளியூர்க்காரன் இல்லை. உங்கள் ஊர்தான், இங்குதான் தங்கப்போகிறேன். கோவில்பட்டியை தலைநகராகக் கொண்டு தனி மாவட்டம் அமைக்கப்படும். என்னை நீங்கள்தான் வெற்றிபெறச் செய்ய வேண்டும்’ என்று கூறினார்.
இந்தத்தேர்தலில் அமமுக, தேமுதிக இணைந்து 234 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது.
Advertisement: