செய்திகள் முக்கியச் செய்திகள்

கருப்பர் கூட்டம் சுரேந்திரனுக்கு ஜாமீன்!

கருப்பர் கூட்டம் சுரேந்திரனுக்கு சேலம் நீதிமன்றன் ஜாமீன் வழங்கியது.

கருப்பர் கூட்டம் யுடியூப் சேனலில் கந்தசஸ்டி கவசம் குறித்து சர்ச்சைக்குறிய கருத்து வெளியிட்டது தொடர்பாக கடந்த ஜூலை மாதம் சுரேந்திரன் கைது செய்யப்பட்டார். பின்னர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்தனர். தொடர்ந்து சேலம் மாநகர சைபர் க்ரைம் மற்றும் சேலம் ஜலகண்டாபுரம் காவல் நிலையத்திலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

சேலம் சைபர் க்ரைம் பதிவு செய்த வழக்கில் சேலம் நீதிமன்றம் இன்று சுரேந்திரனுக்கு ஜாமீன் வழங்கியது.இதே போல் சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் காவல் நிலையத்தில் பதிவு செய்த வழக்கில் கடந்த திங்கட்கிழை மேட்டூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. ஏற்கனவே ஜனவரி 21-ம் சென்னை நீதிமன்றத்தில் ஜாமீன் கிடைத்தும், கடந்த 4-ம் தேதி குண்டர் சட்டத்தில் இருந்து விடுவிக்கப்பட்டும் இது வரை சென்னை புழல் சிறையில் உள்ள சுரேந்திரன் நாளை விடுதலையாக வாய்ப்புள்ளது.

Advertisement:

Related posts

புதிதாக கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக பெரம்பலூர் நீடிப்பு!

Niruban Chakkaaravarthi

டிச 7 ல் வேல் யாத்திரை நிறைவு: எல்.முருகன்

Niruban Chakkaaravarthi

தயாரிப்பாளர்களுக்கு திரையரங்கு உரிமையாளர்கள் நெருக்கடி: பாரதிராஜா குற்றச்சாட்டு!

Nandhakumar