இந்தியா செய்திகள் முக்கியச் செய்திகள் லைப் ஸ்டைல்

பறவை, அணில்களுக்கும் பசிக்குமில்ல.. வைரலாகும் மாணவர்களின் செயல்!

முல்லைக்குத் தேர் கொடுத்த மன்னன் பாரி வள்ளல் போல் பறவைகளுக்கும் அணில்களுக்கும் உணவளிக்கும் பள்ளி மாணவர்களின் செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்தியாவின் வைர நகரம் என்றழைக்கப்படும் சூரத்தின் ராண்டர் பகுதியிலுள்ள சுமன் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் நான்கு பேர் ஒன்று சேர்ந்து அப்பகுதியிலுள்ள பறவைகளுக்கும் அணில்களுக்கும் உணவளித்து வருகின்றனர். இந்த மாணவர்கள் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை தங்களுக்குக் கை செலவுக்காக கொடுக்கப்படும் சிறு தொகையில் அனைவரும் ஒன்று சேர்ந்து ரூ. 100,200 செலவு செய்து சோளக் கதிர்களை வாங்கி அதனை அணில்களும் பறவைகளும் எளிதில் சாப்பிடுவதற்கு ஏற்ப அப்பகுதியிலுள்ள ஒவ்வொரு மரத்திலும் பதித்து வைக்கின்றனர். இதனால் அணில்களும் பறவைகளும் உணவு தட்டுப்பாடு ஏற்படாமல் உள்ளது.

மாணவர்கள் மரத்தில் பதித்து வைக்கும் இந்த சோள கதிர்களை அணிகளுக்கும் பறவைகளும் தங்களுடைய பசியாற உணவருந்திச் செல்கின்றனர்.
மாணவர்களின் இந்த செயலை பருல் மஹாதிக் என்னும் பத்திரிக்கையாளர் புகைப்படமாகவும் வீடியோ காட்சியாகவும் எடுத்துத் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனையடுத்து இந்த புகைப்படம் பெரிதும் பகிரப்பட்டு இணையத்தில் வைரலாகி வருகிறது. கோடைக் காலத்தில் மாணவர்களுடைய இந்த செயல் சமூக வலைத்தளங்களில் மக்கள் பாராட்டிவருகின்றனர்.

Advertisement:

Related posts

பெருந்தொற்று பரவி ஒராண்டிற்கு பிறகு முதல் கொரோனா பாதிப்பை பதிவு செய்த லட்சத்தீவு!

Saravana

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த சசிகலா டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்!

Jayapriya

மற்றொரு கொரோனா தடுப்பூசியை அறிமுகப்படுத்த தயாராகும் சீரம் நிறுவனம்!

Jayapriya