இந்தியா செய்திகள் முக்கியச் செய்திகள்

மராத்தா சமூகத்திற்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீடு ரத்து: உச்ச நீதிமன்றம் உத்தரவு!

மராத்தா சமூகத்திற்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீடு, அரசியல் அமைப்புக்கு எதிரானது என கூறியுள்ள உச்ச நீதிமன்றம், அந்த சட்டத்தை ரத்து செய்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தில் மராத்தா பிரிவினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 16 சதவிகித இடஒதுக்கீடு வழங்கி 2018 ஆம் ஆண்டு அம்மாநில அரசு சட்டம் நிறை வேற்றியது. இந்தச் சட்டத்துக்கு எதிராக மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

அதை விசாரித்த மும்பை உயர்நீதிமன்றம், மராத்தா சமூகத்தினருக்கான இடஒதுக்கீடு செல்லும் என்றும் அதே நேரத்தில் இடஒதுக்கீடு அளவானது கல்வியில் 13 சதவிகிதம் என்றும் வேலைவாய்ப்பில் 12 சதவிகிதம் இருக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில் மராத்தா சமூகத்தினருக்கான இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கை இன்று விசாரித்த 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, மராத்தா சமூகத்துக்கான இட ஒதுக்கீட்டை ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளது.

மராத்தா சமூகத்திற்கு அதிக இட ஒதுக்கீடு வழங்குவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை எனக்கூறிய உச்ச நீதிமன்றம், நாடாளுமன்றத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள சட்ட திருத்தத்தின் படி, சமூக பொருளாதாரத்தில் பின் தங்கிய பிரிவில் எந்த ஒரு சாதியையும் மாநில அரசுகள் இணைக்க முடியாது எனவும் மாநில அரசுகள் மத்திய அரசுக்கு பரிந்துரை மட்டுமே செய்ய முடியும் எனவும் நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள் ளனர்.

Advertisement:

Related posts

ஒரே நாளில் 46,951 பேருக்கு கொரோனா தொற்று!

Ezhilarasan

முன்னிலை நிலவரம்!

Jeba

தமிழகத்தில் தேர்தலை முன்னிட்டு ஈரடுக்கு பாதுகாப்பு!

Gayathri Venkatesan