இந்தியா முக்கியச் செய்திகள்

புலம்பெயர் தொழிலாளர்களுடைய குழந்தைகளின் நிலை என்ன? உச்சநீதிமன்றம் கேள்வி

புலம்பெயர் தொழிலாளர்களுடைய குழந்தைகளின் விவரங்களை தாக்கல் செய்யுமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புலம்பெயர் தொழிலாளர்களுடைய குழந்தைகளின் அடிப்படை உரிமைகளை பாதுகாக்க கோரி சைல்ட்டு ரைட்ஸ் டிரஸ்ட் என்ற அமைப்பு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு, தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், கடந்த 2019-ம் ஆண்டில் 2 ஆயிரத்து 209 குழந்தை திருமணங்களும், 2020-ம் ஆண்டில் 3 ஆயிரத்து 208 குழந்தை திருமணங்களும் தடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. குழந்தைகள் பாதுகாப்புக்காக 13 ஆயிரத்து 717 பாதுகாப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, மாநிலங்களில் உள்ள புலம்பெயர் தொழிலாளர்களுடைய குழந்தைகளின் எண்ணிக்கை, அவர்களின் நிலை குறித்து பதிலளிக்க அனைத்து மாநிலங்களுக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

Advertisement:

Related posts

பேருந்து நிலையத்திலேயே அமர்ந்து ஆன்லைன் தேர்வு எழுதிய மாணவர்!

Jayapriya

சென்னையில் பேனர் வைத்தால் நடவடிக்கை: மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை!

Jeba

மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி சக்கர நாற்காலியில் பேரணி!

Karthick