பேரறிவாளன் விவகாரத்தில் பல்நோக்கு விசாரணை கண்காணிப்பு முகமை நடத்திய விசாரணை முடியும் வரை தான் முடிவெடுக்க இயலாது என்று தமிழக ஆளுநர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழங்கிய நகலை வழங்குமாறு அற்புதம்மாள் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, 1991, மே 21ம் தேதி தமிழகத்தின் ஸ்ரீபெரும்பதூரில் மனித வெடிகுண்டு மூலம் படுகொலை செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் பேரறிவாளன் உள்பட 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு சுமார் 30 ஆண்டுகளாக சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றனர். பேரறிவாளன் விடுதலை செய்ய வேண்டும் என்று பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் தொடர்ந்து சட்டரீதியாக போராட்டத்தை நடத்திவருகிறார்.
பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் பல்நோக்கு விசாரணை கண்காணிப்பு முகமை நடத்தும் விசாரணை முடியும்வரை எந்த முடிவையும் எடுக்க முடியாது என தமிழக ஆளுநர் கடிதத்தில் தெரிவித்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றம் மனுதாரரிடம் தெரிவித்திருந்தது. இந்த விவகாரம் தொடர்பாக பேரறிவாளனின் தாயார் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணை இன்று நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வுக்கு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க, நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டனர்.
மேலும் பேரறிவாளனின் தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரிய பிரதான மனுவுடன் இணைத்து ஆளுநர் கடித நகல் கோரிய அற்புதம்மாளின் மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Advertisement: