இந்தியா செய்திகள் முக்கியச் செய்திகள்

அவசர வழக்காக ராமர் பாலம் வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!

ராமர் பாலத்தை தேசிய புராதன சின்னமாக அறிவிக்கக்கோரிய பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தொடர்ந்த வழக்கை, அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.

ராமேஸ்வரம் அருகே பாம்பனிலிருந்து இலங்கை தலைமன்னார் தீவுகளுக்கு இடையே சுண்ணாம்பு கற்களான 48 கிலோ.மீட்டர் நீளம் கொண்ட பாலம் கடலுக்கு அடியில் அமைந்துள்ளது.

இந்த பாலத்தை ராமர் பாலம் என பல இந்து அமைப்புகள் அழைத்து வருகிறார்கள். இதனால் இந்த ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்க வேண்டும் என கடந்த 2015ஆம் ஆண்டு பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கை தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே அமர்வு விசாரித்தது. அப்போது, இந்த மனுவை விரைந்து விசாகிக்க போதிய நேரமில்லாத காரணத்தால்
இந்த வழக்கு தொடர்பாக அடுத்து வரும் தலைமை நீதிபதி முடிவு செய்வார் எனத் தெரிவித்தனர். இதன் காரணமாக ராமர் பாலத்தை தேசிய புராதன சின்னமாக அறிவிக்கக்கோரிய வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது.

Advertisement:

Related posts

மெகபூப முப்தி பாஸ்போர்ட் நிராகரிப்பு!

L.Renuga Devi

பள்ளிகளை மூட தமிழக அரசு உத்தரவு!

Karthick

அதிமுகவின் தேர்தல் அறிக்கை மக்கள் மனதில் நம்பிக்கை ஏற்படுத்தியுள்ளது: அதிமுக வேட்பாளர் வெங்கடாசலம்

Gayathri Venkatesan