இந்தியா சட்டம் முக்கியச் செய்திகள்

ஆணாதிக்க கருத்துகளை நீதிபதிகள் தவிர்க்கவேண்டும்: உச்ச நீதிமன்றம் அறிவுரை

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளின்போது நீதிபதிகள் தாங்கள் கூறும் கருத்துகள் ஆணாதிக்க சிந்தனை கொண்டதாகவோ அல்லது தவறான எடுத்துக்காட்டுக்கு வழிவகுக்கும் வகையிலோ உள்ளது. இதுபோன்ற கருத்துகளை நீதிபதி கூறுவதை தவிர்க்கவேண்டும் என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா உயர் நீதிமன்றம் சமீபத்தில் பாலியல் வழக்கு ஒன்றை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. அப்போது நீதிபதிகள் பாதிக்கப்பட்ட பெண் குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு ராக்கி கட்டினால் ஜாமீன் வழங்குவதாகக் கருத்து தெரிவித்தனர். இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகள் எம். கான்வில்கர் மற்றும் எஸ்.ரவீந்திர பாட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. அப்போது பேசிய நீதிபதிகள், “பாலியல் வழக்குகள் குறித்து சமீபகாலமாக நீதிபதிகள் தெரிவிக்கும் கருத்துக்கள் சமூகத்தில் தவறான எடுத்துக்காட்டாக உள்ளது. நீதிபதிகள்தான் அனைத்து தரப்பு மக்களுக்கும் முன்உதாரணமாக இருக்க வேண்டும். அதைத் தவிர்த்து அவர்களே தவறான கருத்துகளைப் பதிவிடக் கூடாது.


பொதுவாக சில பாலியல் தொடர்பான வழக்குகளில் நீதிபதிகள் ஏற்றுக்கொள்ள முடியாத கருத்துகளைத் தெரிவிப்பது வழக்கமாக இருந்து வருகிறது. மேலும் சில வழக்குகளில் பாதிக்கப்பட்ட நபருக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் கருத்து கூறுவது, பாதிக்கப்பட்டவரை இழிவாகப் பேசுவது, கேலிசெய்வது, கிண்டலாகப் பேசுவது போன்ற அவலங்கள் நிகழ்ந்து வருகிறது.

பாலியல் தொடர்பான வழக்குகளை எடுத்து நடத்தும் போது நீதிபதிகள் பெண்களை இழிவுபடுத்தும் வகையிலான தவறான கருத்துக்கள் கூறுவதைத் தவிர்க்கவேண்டும். பாலியல் சம்பந்தமான வழக்குகளில் கருத்துகளைப் பதிவிடும் பொழுது மிகச் சரியான கருத்துகளைத் தெரிவிக்கவேண்டும். ஒருதலைபட்சமான கருத்துகளைப் பதிவிடக் கூடாது” என அறிவுறுத்தியுள்ளனர்.

Advertisement:

Related posts

அமெரிக்க பாடப்புத்தகத்தில் இடம்பிடித்த இந்திய சூழலியல் ஆர்வலரின் கதை!

Dhamotharan

தேர்தலுக்கு 5 நாட்களுக்கு முன்பு வாக்காளர் தகவல் சீட்டு: தேர்தல் அதிகாரி

Karthick

கர்நாடகாவில் பசுவதை தடுப்பு மசோதா நிறைவேற்றம்!

Niruban Chakkaaravarthi