கமல்ஹாசனுக்கு ஆதரவாக நடனமாடி அவரது மகள் அக்ஷரா மற்றும் நடிகை சுகாஷினி ஆகியோர் வாக்கு சேகரித்தனர்.
தமிழகத்தில் நாளை மறுநாள் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடக்கவுள்ளது. அதற்கான தேர்தல் பிரசாரம் இன்று இரவு 7 மணியுடன் நிறைவடைகிறது. அதனால், வேட்பாளர்கள், அவர்களை ஆதரிக்கும் பிரபலங்கள் அனைவரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.
அந்த வகையில், கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனை ஆதரித்து அவரது மகள் அக்ஷரா மற்றும் நடிகை சுகாஷினி ஆகியோர் நடனமாடி வாக்கு சேகரித்தனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிறது.
Advertisement: