செய்திகள் தமிழகம் முக்கியச் செய்திகள்

ஆதிதிராவிடர் நல விடுதியிலிருந்து வெளியேற்றப்பட்ட மாணவிகள்!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள அரசுப் பள்ளியில், 10 மற்றும், 12-ம் வகுப்பு பயிலும் மாணவிகள் ஆதிதிராவிடர் நல விடுதியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ள சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது..

கொரொனா தொற்று பாதிப்பு குறைந்துள்ள நிலையில் தற்போது பள்ளி மற்றும் கல்லூரிகள் தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொடைக்கானலில் உள்ள அரசுப் பள்ளியில் பயிலும் மலைவாழ் பகுதியில் வசிக்கும் 10 மற்றும், 12-ம் வகுப்பு மாணவிகள் ஆதிதிராவிடர் நல விடுதியில் தங்கி பயின்று வருகின்றனர். தற்போது இம்மாணவிகள் திடீரென வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இது குறித்து விசாரிக்கையில் விடுதியில் சேர்த்துக்கொள்வதற்கான ஆணை இன்னும் வரவில்லை என்றும் விடுதி நிர்வாகத் தரப்பிலிருந்து சொல்லப்பட்டுள்ளது.

நீண்ட இடைவெளிக்கு பின்னர் கல்வி நிலையங்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில், பொதுத் தேர்வுக்கான தேதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த சூழலில் ஆதிதிராவிடர் நல விடுதியின் இந்த செயல் மாணவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement:

Related posts

“எழுவர் விடுதலையில் அதிமுக அரசு உறுதியாக உள்ளது” – ஓ.பி.எஸ்

Jayapriya

தடகள வீராங்கனை அஸ்ஸாமில் டி.எஸ். பி.யாக நியமனம்!

Gayathri Venkatesan

ஐ லவ் யூ தலைவா: பாரதிராஜா

Niruban Chakkaaravarthi