தமிழகம்

8ம் தேதி பள்ளி திறப்பு; அனுமதி கடிதம் கட்டாயம்

பள்ளிக்கு வரும் மாணவர்கள் கட்டாயமாக பெற்றோரிடம் அனுமதி கடிதத்தை பெற்று வர வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. இந்நிலையில், கடந்த வாரம் பிப்ரவரி மாதத்திற்கான ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்தது. அதில், வரும் பிப்.8ம் தேதி முதல் 9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி திறக்கப்படும் என தெரிவித்திருந்தது. கொரோனா வழிகாட்டு விதிமுறைகளை பள்ளிகள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்றும் மாணவர்கள் கட்டாயம் முக கவசம் அணிந்து வர வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தமிழக அரசு இன்று புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “ பள்ளிக்கு வரும் மாணவர்கள் கட்டாயம் பெற்றோர் அனுமதி கடிதத்துடன் வர வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:

Related posts

புரோகிதர் போல் சித்தரிக்கபட்ட திருவள்ளுவர் – தஞ்சை தமிழ் பல்கலைக்கழக மாணவ மாணவிகள் ஆர்ப்பாட்டம்!

Karthick

சசிகலா உடல்நிலையில் தொடர் முன்னேற்றம்: மருத்துவர்கள் தகவல்!

Jayapriya

பேச்சுவார்த்தை தோல்வி…. 41வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம்!

Nandhakumar

Leave a Comment