மக்களோடு மக்களாக என்றும் இருப்பவன் நான் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கோவை கொடீசியா மைதானத்தில் திமுக சார்பில் “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” பரப்புரை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், திமுக ஆட்சி அதிகாரத்திற்கு வந்த பிறகு, மக்களிடம் வாங்கிய மனுக்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பேன் என்றார். மேலும், சிலம்ப கலையை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
தேர்தலுக்காகவும், அரசியலுக்காகவும் வருபவன் நான் அல்ல என்றும், மக்களோடு மக்களாக எப்போதும் இருப்பவன் நான் என மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டார்.
Advertisement: