டெங்கு நோயை பரப்பும் கொசு உற்பத்தியை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வரக்கூடிய நிலையில், டெங்கு நோயை பரப்பும் கொசு உற்பத்தியை தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து வழக்கறிஞர் சூர்யபிரகாசம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பேனர்ஜி, செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு தலைமையில் இன்று விசாரணைக்கு வந்தது. இதில், டெங்கு நோயை பரப்பும் கொசு உற்பத்தியை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மேலும், கொரோனா உள்ளிட்ட தொற்று நோய்களை கட்டுப்படுத்த 2,715 தற்காலிக கூடுதல் சுகாதார ஆய்வாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும், டெங்கு பரவும் பகுதிகளை ஆய்வு செய்ய 9 இடங்களில் மண்டல பூச்சியியல் ஆய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளது.
மட்டுமல்லாது, டெங்கு நோய் சிகிச்சைக்காக முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் என்றும் தமிழக அரசு பதிலளித்துள்ளது.
தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்று 4,000ஐ நெருங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisement: