செய்திகள் முக்கியச் செய்திகள்

மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சி தலைவர் வே.ஆனைமுத்து உடலுக்கு மு.க.ஸ்டாலின் அஞ்சலி!

மறைந்த மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சி தலைவர் வே.ஆனைமுத்து உடலுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.

மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சி தலைவரும், பெரியாரிய சிந்தனையாளருமான வே.ஆனைமுத்து மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 96. புதுச்சேரியில் உயிரிழந்த வே.ஆனைமுத்துவின் உடல் இறுதி அஞ்சலிக்காக தாம்பரத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மறைந்த வே.ஆனைமுத்துவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். ஸ்டாலினுடன் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, தாம்பரம் எம்எல்ஏ ராஜா மற்றும் திமுக நிர்வாகிகள் உடன் வந்தனர். மறைந்த வே. ஆனைமுத்துவின் உடல் மருத்துவ மாணவர்களின் ஆராய்ச்சிக்காக ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரிக்கு தானம் செய்யப்படுகிறது.

Advertisement:

Related posts

விலங்குகளை கொன்று உடலை கடத்துவது குறித்து சிபிஐ விசாரிக்க கோரிய வழக்கு!

Saravana

பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுமா என்பது குறித்து முதல்வருடன் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்!

Jayapriya

“சுயமரியாதையை மீட்க திமுகவுக்கு ஆதரவு தாருங்கள்” ஸ்டாலின்!

L.Renuga Devi