தமிழகம் முக்கியச் செய்திகள்

ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிப்பு: பிரதமருக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்

ஸ்டெர்லைட் ஆக்சிஜன் தமிழகத்தின் தேவைக்கு பிறகே மற்ற மாநிலங்களுக்கு வழங்க வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் பிரதமரிடம் வலியுறுத்தி உள்ளார். மேலும் திமுக அரசு அமைந்ததும் ஸ்டெர்லைட் ஆலை முழுவதுமாக மூடி சீல் வைக்கப்படும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்வது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மனுவில், உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கி உள்ளது. ஸ்டெர்லைட் ஆலையில் தயாரிக்கப்படும் ஆக்சிஜனை கண்காணிக்கப் பாகுபாடற்ற குழு அமைக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

NEERI-யால் பரிந்துரைக்கப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த நிபுணர்கள் 3 பேர் இந்த குழுவில் இடம் பெறுவார்கள் என்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் சார்பாக வழக்கறிஞர் தரப்பில் 2பேரை அக்குழுவில் இடம்பெற அனுமதிப்பதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர். எந்த வகையிலும் தாமிர உற்பத்தியை வேதாந்தா நிறுவனம் தயாரிப்பதற்கு அனுமதி இல்லை என்றும் ஆக்சிஜன் தயாரிக்க மட்டுமே ஸ்டெர்லைட் ஆலை இயங்கும் என்றும் நீதிபதிகள் திட்டவட்டமாக வலியுறுத்தினர்.

இந்த வழக்கின் வாதத்தின்போது, ஸ்டெர்லைட் ஆலையில் தயாரிக்கப்படும் ஆக்சிஜனை வழங்கும்போது தமிழக அரசுக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் தயாரிக்கப்படும் ஆக்சிஜன் தமிழக அரசுக்கு வழங்குவது ஏற்புடையதாக இல்லை என்றும் மத்திய தொகுப்பிற்கே வழங்க வேண்டும் என்றும் மத்திய அரசு வாதத்தில் தெரிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து திமுக தலைவர் ஸ்டாலின் ஸ்டெர்லைட்டில் உற்பத்தி செய்யும் ஆக்சிஜன் தமிழகத்திற்குத்தான் முதலில் வழங்க வேண்டும் என்றும் அதன் பிறகே மற்ற மாநிலங்களுக்கு வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். மேலும் திமுக ஆட்சி அமைந்ததும் ஸ்டெர்லைட் முழுவதுமாக மூடி சீல் வைக்கப்படும் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்த தகவலை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Advertisement:

Related posts

ஸ்டாலினை சாடிய அதிமுக வேட்பாளர்!

Saravana Kumar

வியக்க வைக்கும் சைக்கிள் மிக்ஸி; இன்ஜினியர்களின் அசத்தல் கண்டுபிடிப்பு!

Jayapriya

பாடகி ரிஹானாவை புகழும் ட்வீட்டுகளுக்கு லைக் செய்த ட்விட்டர் நிறுவனத் தலைவர் ஜாக் டோர்சே!

Jayapriya