செய்திகள் தமிழகம் முக்கியச் செய்திகள்

“ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தால் அவர் குடும்பத்தினருக்கு மட்டுமே நல்லது செய்வார்” – முதல்வர் பழனிசாமி

மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தால், அவர் குடும்பத்தினருக்கு மட்டுமே நல்லது செய்வார் என்று நாமக்கல் பரப்புரையில் முதலைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கபிலர்மலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், தமிழகத்தில் 30 ஆண்டு காலம் அதிமுக ஆட்சி செய்து உள்ளதாக பெருமிதம் தெரிவித்தார். எம்ஜிஆர், ஜெயலலிதா என இருபெரும் தலைவர்கள் மக்கள் மனதில் வாழ்ந்த தெய்வங்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். அவர்களின் வழியில் ஏழை, எளிய மக்களுக்கு அதிமுக அரசு தொடர்ந்து பாடுப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

திமுக இதுவரை ஐந்து முறை ஆட்சியில் இருந்திருக்கிறது என்று குறிப்பிட்டா அவர், அவர்கள் ஆட்சியில் மக்களுக்காக என்ன செய்தார்கள் எனவும் கேள்வி எழுப்பினார். மேலும் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தால், அவரது குடும்பத்தினருக்கு மட்டுமே நல்லது செய்வார் எனக் குற்றஞ்சாட்டினார்.

Advertisement:

Related posts

சசிகலா அதிமுகவில் இணைக்கப்படுவாரா? -ஜெயக்குமார் பதில்

Niruban Chakkaaravarthi

பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி தெரிவித்தார் ரஜினிகாந்த்!

Jeba

முகநூல் வாயிலாக பெண்களை ஏமாற்றிய இளைஞர் கைது!

Dhamotharan