தமிழகம் முக்கியச் செய்திகள்

செய்தியாளர்களும் முன்களப் பணியாளர்களே : ஸ்டாலின்

செய்தித்தாள், காட்சி, ஒலி ஊடகங்களில் பணியாற்றுவோர்களும் முன்களப் பணியாளர்களாகக் கருதப்படுவார்கள் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் வரும் 7ம் தேதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராகப் பதவி ஏற்கவுள்ளார். இதனைத்தொடர்ந்து அதற்கான பணியை அவர் தொடங்கி மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் அவர் அறிக்கை ஒன்று தற்போது வெளியிட்டிருக்கிறார். அதில், கடும் மழை, வெயில் மற்றும் பெருந்தொற்றிலும் உயிரைப் பணயம் வைத்து உழைக்கும் ஊடகத் துறையினர் முன்களப் பணியாளர்களாகத் தமிழகத்தில் கருதப்படுவார்கள் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முன்களப் பணியாளர்களுக்கான உரிமைகளும், சலுகைகளும் செய்தியாளர்களுக்கு உரிய முறையில் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். இதனையடுத்து மகத்தான மக்களாட்சியின் மாண்பிற்கு 4-வது தூணாய் விளங்குவது ஊடகத் துறை என்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் தலையாய பணியை ஊடகங்கள் மேற்கொள்கின்றன எனவும் அவர் தெரிவித்தார்.

Advertisement:

Related posts

கொரோனா விதிமுறையை மீறிய பிரதமருக்கு ஒரு லட்சம் அபராதம்!

L.Renuga Devi

போக்குவரத்து காவலரை தாக்கிய மக்கள்: சமூக வலைத்தளத்தில் வைரலான வீடியோ

Niruban Chakkaaravarthi

இந்திய அணி அபார வெற்றி; டெஸ்ட் தொடரை கைப்பற்றியது

Saravana Kumar