தமிழகம் தேர்தல் 2021 முக்கியச் செய்திகள்

முதல் முறையாக முதல்வர் பொறுப்பேற்கும் மு.க.ஸ்டாலின்!

தமிழக சட்டப்பேரவை தேர்தலில், பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களை விட கூடுதல் இடங்களில் திமுக கூட்டணி முன்னிலை பெற்றிருப்பதால் தி.மு.க. ஆட்சி அமைப்பது உறுதியாகி உள்ளது.

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும், கடந்த மாதம் 6-ந் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் 72.78 சதவீத வாக்குகள் பதிவானது. நேற்று காலை 8 மணிக்கு, தமிழகம் முழுவதும் 75 மையங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. காலை 9 மணி முதலே 75 மையங்களில் முன்னணி நிலவரம் வெளியாகத் தொடங்கியது. திமுக கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை பெற, அதிமுக பின் தங்கியது. இரவு நிலவரப்படி, திமுக 139 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. 19 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இதேபோன்று, அதிமுக 65 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. 11 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.

சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட மு.க.ஸ்டாலின், மொத்தம், ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 462 வாக்குகள் பெற்று, 70 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். எடப்பாடி சட்டப்பேரவை தொகுதியில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் சம்பத்குமாரை விட 72,856 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

தற்போதுள்ள முன்னிலை மற்றும் வெற்றி நிலவரப்படி, திமுக பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களை விட கூடுதல் இடங்களில் முன்னிலையில் பெற்றுள்ளது. எனவே திமுக ஆட்சியமைப்பது உறுதியாகியுள்ளது. அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் பொறுப்பேற்க உள்ளார். 10 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் மீண்டும் தி.மு.க. ஆட்சி ஆட்சியமைக்க உள்ளது. 53 ஆண்டுகால அரசியல் பயணத்தை மேற்கொண்டுள்ள சட்டப்பேரவை உறுப்பினர், சென்னை மாநகராட்சி மேயர், அமைச்சர், துணை முதலமைச்சர் உள்ளிட்ட பொறுப்புக்களை வகித்துள்ளார். தற்போது முதல் முறையாக ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ளார்.

Advertisement:

Related posts

இன்று 1,289 பேருக்கு கொரோனா தொற்று பாசிடிவ்!

Gayathri Venkatesan

தவறான தொடர்பு: ஆண் நண்பர்களுடன் சேர்ந்து கணவனை கொலை செய்த பெண்!

Saravana

பொம்மை யானையை சேதப்படுத்திய காட்டு யானை!

Jayapriya