செய்திகள் தமிழகம் தேர்தல் 2021 முக்கியச் செய்திகள்

ஊழல் ஆட்சிக்கு முடிவு கட்ட மக்கள் முடிவெடுத்து விட்டனர்: ஸ்டாலின்

ஊழல் ஆட்சிக்கு முடிவு கட்ட மக்கள் முடிவெடுத்து விட்டதாக திமுக தலைவர் ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற பரப்புரையில் திமுக வேட்பாளர் மா.சுப்ரமணியம், விருகம்பாக்கம் திமுக வேட்பாளர் பிரபாகர் ராஜா, வேளச்சேரி காங்கிரஸ் வேட்பாளர் ஹசன் மெளலானா ஆகியோருக்கு ஆதரவாக வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது மக்கள் மத்தியில் பேசிய மு.க.ஸ்டாலின், சைதை தொகுதியில் மா.சுப்ரமணியம் பல நன்மைகளை செய்துள்ளதாக கூறினார். சைதாப்பேட்டை தொகுதி திமுகவின் கோட்டையாகவும், கருணாநிதியின் தொகுதியாகவும் இருந்ததையும் அவர் சுட்டிக்காட்டினார்.

சென்னை மேயராக இருந்தபோது செம்பரம்பாக்கம் ஏரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட காரணமாக இருந்தவர் சைதை துரைசாமி என குற்றஞ்சாட்டிய அவர் 2015 பெருவெள்ளம் இயற்கையானதல்ல செயற்கையானது எனவும் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

1991 முதல் 1996ம் ஆண்டு வரை நடைபெற்ற அதிமுக ஆட்சியை மிஞ்சும் அளவிற்கு தற்போதைய ஆட்சியில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டி உள்ளார்.

Advertisement:

Related posts

சூரப்பாவிற்கு கமல்ஹாசன் ஆதரவு!

Niruban Chakkaaravarthi

வாக்கு எண்ணும் மையங்களுக்கு காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு : மகேஷ்குமார் அகர்வால்

Karthick

வயல் வெளியில் மர்மமான முறையில் இறந்து கிடந்த சகோதரிகள்!

Niruban Chakkaaravarthi