செய்திகள் முக்கியச் செய்திகள்

சென்னையிலிருந்து வாக்களிக்க சொந்த ஊருக்கு சென்றவர்களின் எண்ணிக்கை தெரியுமா?

சென்னையில் தங்கியிருப்பவர்கள் சொந்த ஊரில் வாக்களிக்க வசதியாக அறிவிக்கபட்ட சிறப்பு பேருந்துகளில் 3 லட்சத்து 96 ஆயிரம் பயணிகள் பயணித்துள்ளதாக தமிழ்நாடு போக்குவரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளது. இதையடுத்து சென்னையில் இருக்கும் வெளி மாவட்டங்களை சேர்ந்தோர் சொந்த ஊரில் வாக்களிக்க வசதியாக கடந்த சில நாட்களாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி நேற்று இரவு 8 மணிவரை சென்னையிலிருந்து வழக்கமாக ஆயிரத்து 850 பேருந்துகள் இயக்கப்பட்டன. கூடுதலாக 248 சிறப்புப் பேருந்துகளும் நேற்று இயக்கப்பட்டன. கடந்த ஒன்றாம் தேதி முதல் நேற்று இரவு எட்டு மணி வரையிலும் 9 ஆயிரத்து 917 பேருந்துகளில் 3 லட்சத்து 96 ஆயிரத்து 687 பயணிகள் வெளியூர்களுக்குப் பயணித்துள்ளனர்.

இதுவரையில் 53 ஆயிரத்து 773 பயணிகள் முன்பதிவும் செய்துள்ளனர். இன்றும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு போக்குவரத்துறை ஏற்கனவே அறிவித்திருக்கிறது.

Advertisement:

Related posts

அதிமுக – பாஜக கூட்டணி உறுதி -ஜெ.பி.நட்டா

Niruban Chakkaaravarthi

போடியில் வேட்புமனு தாக்கல் செய்தார் துணை முதல்வர் ஓபிஎஸ்!

Karthick

ஆறு மொழிகளில் Translation செய்யும் அமேசான் அலெக்ஸா!

Jayapriya