சினிமா செய்திகள் முக்கியச் செய்திகள்

இயக்குநர் எஸ். பி. ஜனநாதன் காலமானார்!

தமிழ் திரைப்பட இயக்குநர்களில் முக்கியமானவரான இயக்குநர் எஸ். பி. ஜனநாதன் உடல் நலக்குறைவால் காலமானார்.

2003ம் ஆண்டு இவர் இயக்கத்தில் வெளியான இயற்கை படத்திற்கு தேசிய விருது வழங்கப்பட்டது. இயற்கை, பேராண்மை, புறம்போக்கு என்கிற பொதுவுடைமை போன்ற படங்களை இயக்கியுள்ளார். இவரின் திரைப்படங்கள் ஆழ்ந்த அரசியல் கருத்துக்கள் கொண்டவை. தற்போது விஜய் சேதுபதி நடித்துள்ள ’லாபம்’ படத்தின் எடிட்டிங் வேலையில் ஈடுபட்டு வந்த ஜனநாதன் உடல் நலக்குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மூளையில் ரத்த கசிவு ஏற்பட்ட காரணத்தால் அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை காலமானார். அவருடைய உடலுக்கு பல்வேறு திரை பிரபலங்களும், கலைஞர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இவரின் மறைவுக்கு நடிகர் ஜெயம் ரவி தனது ட்விட்டர் பக்கத்தில் ஆழ்ந்த இறங்கல் தெரிவித்துள்ளார். ‘ எங்களிடமிருந்து உங்கள் நினைவுகளை யாராலும் எடுத்துச் செல்ல முடியாது’ என்று ஜெயம் ரவி பதிவிட்டுள்ளார்.

Advertisement:

Related posts

ஒரே நாளில் 1 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு!

Karthick

இந்திய பாரம்பரியத்துக்கு ‘மதச்சார்பின்மைதான்’ அச்சுறுத்தல் யோகி ஆதித்யநாத்

Jeba

எனது வெற்றி மாற்று அரசியலுக்கான வெற்றி : சீமான்!

Saravana Kumar