தமிழகம் முக்கியச் செய்திகள்

தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு!

தென் தமிழக கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென்தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழைபெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் பிற மாவட்டங்கள் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் வறண்ட வானிலையே நிலவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், அதிகப்பட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement:

Related posts

பாமக நிர்வாகியை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்ற மர்ம கும்பல்!

Karthick

கேரள உள்ளாட்சித் தேர்தல்: ஒரு ஓட்டில் பாஜகவிடம் தோல்வியடைந்த காங்கிரஸ் மேயர் வேட்பாளர்!

Arun

பேரறிவாளன் விடுதலையில் ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார்: துரைமுருகன்!

Saravana