தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பிய 4 பேருக்கு உருமாறிய கொரோனா தொற்று இருப்பது தற்போது கண்டறியப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வந்து கொண்டிருக்கக்கூடிய நிலையில் தற்போது, உருமாறிய கொரோனா புது அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றது.

இந்நிலையில் இந்தியாவில் இம்மாத தொடக்கத்தில், பிரேசிலை சேர்ந்த நபர் ஒருவருக்கு உருமாறிய கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருந்தார். தற்போது அதனைத் தொடர்ந்து, ஆப்பிரிக்காவிலிருந்து நாடு திரும்பிய நான்கு பேருக்கு உருமாறிய கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
அவர்களுடன் பயணித்தவர்கள் மற்றும் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என ஐசிஎம்ஆரின் இயக்குநர் பலராம் பார்கவா தெரிவித்துள்ளார். இதுவரை மொத்தம் இந்தியாவில் 187 ஐரோப்பியர்கள் உருமாறிய கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுடன் தொடர்பிலிருந்தவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையில் உள்ளனர் என பலராம் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisement: