ஆசிரியர் தேர்வு இந்தியா

உறைபனியில் பாதுகாப்பில் ஈடுபடும் வீர்ரகளுக்காக சோலார் கூடாரம்; லடாக் இன்ஜினியரின் கண்டுபிடிப்பு

உறைபனியில் பாதுகாப்பில் ஈடுபடும் வீர்ரகளுக்காக சோலார் கூடாரம் ஒன்றை லடாக்கின் பொறியியலாளர் சோனம் வாங்சுக் கண்டுபிடித்துள்ளார்.

லடாக்கின் பொறியியலாளரும், கல்வி சீர்த்திருந்தவாதி மற்றும் கண்டுபிடிப்பாளருமான சோனம் வாங்சுக், லடாக்கின் குளிர்ந்த மற்றும் உயரமான தட்பவெப்பநிலை பகுதியில் பாதுகாப்பில் இருக்கும் இந்திய ராணுவ வீரர்களுக்கு சோலார் டென்ட் ஒன்றின் முன்மாதிரியை உருவாக்கியது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்.

அதன்படி, டென்ட் பகுதிக்கு வெளியே -14 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இருக்கும் போதும் டென்ட் உள்ளே +15 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இருக்கும். 30 கிலோ மட்டுமே கொண்ட இதை எளிதாக எடுத்துச் செல்லலாம் என்றும், இதற்குள் 10 ராணுவ வீரர்கள் வரை தங்கலாம் என்றும் இது சோலாரில் செயல்படும் என்பதால் சுற்றுச்சூழல் மாசை ஏற்படுத்தாது எனவும் சோனம் வாங்சுக் தெரிவித்து இருக்கிறார்.

இதுகுறித்து பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டி அளித்த சோனம், “இது நான் உருவாக்கிய சோலார் டென்டின் இரண்டாவது முன்மாதிரி. முதலாவது ஒரு தசாப்தத்திற்கு முன்னர் சாங்தாங் பகுதியில் வசித்து வரும் நாடோடிகளுக்காக செய்யப்பட்டது, ஆனால், அரசு இந்த கண்டுபிடிப்பை ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால், அவர்கள் பருத்தியால் ஆன டெண்ட்டில் தான் வசித்து வருகின்றனர்.

அதிகப்படியான குளிர்காலத்தில் தங்குமிடங்கள் இல்லாத இடங்களில் ஏராளமான இராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். இதனால், அவர்கள் தாங்கள் இருக்கும் பகுதியை கதகதப்பாக வைத்துக்கொள்ளவும், விளக்குகள் எரிக்கவும் மண்ணெயை பயன்படுத்தினர். இது அரசுக்கு மேலும் செலவை ஏற்படுத்தும் ஒன்றாகவே உள்ளது. அத்துடன் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் ஒன்றாகவும் விளங்கி வருகிறது. இந்த காரணங்கள் தான் ராணுவத்திற்கு ஏதேனும் கண்டுபிடிப்புகளை செய்ய வேண்டும் என என்னை சிந்திக்க வைத்தது என தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து இந்த சோலார் கூடாரம் குறித்து இந்தியா ராணுவத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், சோதனைக்கு பிறகுதான் உற்பத்தி குறித்த முடிவுகள் எடுக்கப்படும். இந்த சோலார் டென்ட் முன்மாதிரி உருவாக்க சுமார் 5 லட்சம் செலவாகியது. உற்பத்தி மற்றும் அளவைப் பொறுத்து அதற்கு சமமாகவோ அல்லது குறைவான தொகையோ செலவாகும். சுமார் ஒரு வாரத்தில், அதனை ராணுவத்தினர் சோதிப்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.

Advertisement:

Related posts

மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை!

Jeba

10 ஆண்டுகளாக இருட்டு அறைக்குள் முடங்கி இருந்த மூன்று பேர்!

Jayapriya

பக்தர்களின்றி வெறிச்சோடி காணப்பட்ட சபரிமலை ஐயப்பன் கோயில்!

Saravana