இந்தியா செய்திகள் முக்கியச் செய்திகள்

தனது பிடியிலிருந்து பாதுகாப்புப் படை வீரரை விடுவித்தது மாவோயிஸ்ட் அமைப்பு!

சத்தீஸ்கரில் மவோயிஸ்ட் குழுக்களால் கடத்தப்பட்ட பாதுகாப்புப்படை வீரர் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளார்.

சமீபத்தில் சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட்டுகள் மற்றும் பாதுகாப்பு படையினருக்கு இடையே ஏற்பட்ட மூன்று மணி நேர மோதலில் பாதுகாப்புப் படைவீரர்கள் 22 பேர் உயிரிழந்திருந்தனர்.

இந்த தாக்குதல் சம்பவத்தில் பாதுகாப்பு படைவீரர்கள் சிலரை மாவோயிஸ்ட்டுகள் கடத்திச் சென்றதாக தகவல் தெரிவித்திருந்தன. இந்த நிலையில் நேற்று ஜம்முவை சேர்ந்த கோப்ரா அமைப்பைச் சேர்ந்த ராகேஸ்வர் சிங் என்கிற பாதுகாப்பு படை வீரரின் புகைப்படத்தை மாவோயிஸ்ட் அமைப்பு வெளியிட்டிருந்தது.

மேலும், பாதுகாப்பு படைவீரர் உயிருடனும், பாதுகாப்புடனும் இருப்பதாகவும் கூறியுள்ள மாவோயிஸ்ட் அமைப்பு, வீரரை விடுக்க ஒப்புக்கொண்டு இதுகுறித்து அரசிடம் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்றும் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளிவந்திருந்தன.

இச்சூழலில் தற்போது பணயக்கைதியாக பிடித்து வைக்கப்பட்டிருந்த பாதுகாப்புப்படை வீரரை ஏறத்தாழ 100 மணி நேரத்திற்கு பின்னர் மாவோயிஸ்ட் அமைப்பு விடுவித்துள்ளது. இந்த தகவலை சத்தீஸ்கர் மாநில அரசு உறுதி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:

Related posts

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதம் வழங்காததால் போராட்டத்தில் ஈடுபட்ட பக்தர்கள்!

Jayapriya

Amazon Prime -ல் இந்தியில் வெளியாகும் சூரரைப் போற்று!

Gayathri Venkatesan

10 ஆண்டுகளாக இருட்டு அறைக்குள் முடங்கி இருந்த மூன்று பேர்!

Jayapriya