செய்திகள் தமிழகம் முக்கியச் செய்திகள்

சிவகாசி பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: ஒருவர் உயிரிழப்பு!

சிவகாசி அருகே விளாம்பட்டியில் தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தால் ஒருவர் உயிரிழந்துள்ளார், மேலும் இரண்டு பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

சிவகாசி அருகே மாரனேரி கிராமத்தில் ராஜீவ் என்ற நபருக்கு சொந்தமான பட்டாசு ஆலை ஒன்று அமைந்துள்ளது. இன்று காலை பூட்டியிருந்த ஆலையின் பட்டாசு சேமிப்பு கிடங்கை மூன்று ஊழியர்கள் சென்று திறக்க முற்பட்டபோது, திடீரென வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது.

இதில் ஒருவர் சம்பவம் இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற இரண்டு பேர் படுகாயம் அடைந்துள்ளனர். வெடிவிபத்தின் பயங்கர சத்தத்தால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தகவல் அறிந்து சம்பவம் இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில், உயிரிழந்த ஊழியர் தர்மலிங்கம் என்றும் படுகாயம் அடைந்த இவர் முருகன், கந்தசாமி எனவும் தெரியவந்துள்ளது.

இதைத் தொடர்ந்து ஆலையின் போர்மேன் முத்துராஜ் மற்றும் மேனேஜர் கோமதிராஜ் ஆகிய இருவர் மீதும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement:

Related posts

தோசை சுட்டுக்கொடுத்து வாக்குசேகரித்த மநீம வேட்பாளர்!

Jeba

‘Covishield’ கொரோனா தடுப்பூசிக்கு அவசரகால பயன்பாட்டு அங்கீகாரம் கோரி விண்ணப்பம்!

Arun

இந்தியாவில் பப்ஜி மீண்டும் எப்போது வெளியாகும்? மத்திய அரசு பதில்!

Jayapriya