சீர்காழியில் நடைபெற்ற இரட்டை கொலை மற்றும் என்கவுண்டர் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தன்ராஜ் என்பவர் நகைக்கடை மற்றும் அடகுக்கடை நடத்தி வருகிறார். கடந்த மாதம் 27ம் தேதி காலை அவரது வீட்டில் நுழைந்த ஒரு கும்பல் அவரது மனைவி ஆஷா, மகன் அகிலை கொலை செய்துவிட்டு 12 கிலோ தங்கம் மற்றும் 6.75 லட்சம் ரூபாயை கொள்ளையடித்து தப்பி சென்றனர். இந்த தகவலறிந்த போலீஸார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அதனைத் தொடர்ந்து கொள்ளையர்களில் ஒருவரான மஹிபால்சிங் போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்டு இறந்த நிலையில், கொலையாளிகள் ரமேஷ் பட்டேல், மணீஷ், கருணா ராம் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் 15 நாள் நீதிமன்ற காவலில் நாகை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக கொள்ளிடம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில் இந்த வழக்கானது சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. வழக்கின் விசாரணை அதிகாரியாக திருச்சி சிபிசிஐடி டிஎஸ்பி பால்பாண்டி நியமிக்கப்பட்டுள்ளார்.
Advertisement: