சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த பெண் பயணிக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது.
தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இதனிடையே கொரோனா தடுப்பூசி போடும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக மருத்துவ பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில், சிங்கப்பூரிலிருந்து 169 பயணிகளுடன் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சி விமான நிலையம் வந்தடைந்தது. அதில் வந்த பயணிகளிடம் கொரானா பரிசோதனை சான்றுகளை அதிகாரிகள் சோதனை செய்த போது, புதுக்கோட்டையை சேர்ந்த பெண் ஒருவரின் சான்றிதழ்களை சரிபார்த்தனர். அப்போது, அவருக்கு கொரோனா சான்றிதழில் பாஸிட்டிவ் என இருந்துள்ளது. இதையடுத்து விமானம் ஏறுவதற்கு முன்பு கொரோனா சான்றுகளை சரிபார்க்கப்பட்டிருக்கும்போது, அவர் எவ்வாறு விமானத்தில் பயணிக்க அனுமதிக்கப்பட்டார் என்பது குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
Advertisement: