டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் டேபிள் டென்னிஸ் இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவைச் சேர்ந்த சரத்கமல் மற்றும் மணிகா பத்ரா ஜோடி தகுதி பெற்றுள்ளது.
கத்தார் தலைநகர் தோஹாவில் டோக்கியோ ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் போட்டிக்கான ஆசிய தகுதி சுற்று போட்டி நடைபெற்றது. இதில் இந்திய டேபிள் டென்னிஸ் வீரர்கள் ஜி.சத்தியன், சுதிர்தா முகர்ஜி, சரத்கமல் மற்றும் மணிக்கா பத்ரா ஆகியோர் கலந்துகொண்டனர்.
டேபிள் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் ஜி.சத்தியன், சுதிர்தா முகர்ஜி கொரிய அணியை எதிர்கொண்டனர். ஆனால் அவர்களிடம் தோல்வியைத் தழுவினார்கள். பின்னர் டேபிள் டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டத்தில் கொரிய அணியை இந்தியாவின் சரத்கமல் மணிக்கா பத்ரா ஆகியோர் எதிர்கொண்டு 8-11, 6-11, 11-.5, 11-6,13-11,11-8 என்ற செட் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
இந்த போட்டியில் வெற்றி பெற்றதையடுத்து சரத்கமல் மணிகா பத்ரா ஜோடி டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். இதுகுறித்து பேசிய ஷரத் மற்றும் மணிகா “கொரிய ஜோடியை வெல்வது மிகவும் கடினமான விஷயமாகும்.
ஆனால் கொரியாவுடன் விளையாடுவதற்கு முன்பு நாங்கள் அவர்கள் விளையாடிய வீடியோக்களை பார்த்து அவர்களை வீழ்த்துவதற்கான யுகங்களைத் தெரிந்துகொண்டோம். அது எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. வலிமையான கொரிய ஜோடியை வீழ்த்தியதன் மூலம் இப்போது உலகின் சிறந்த ஜோடிகளில் நாங்கள் இருக்கிறோம் என்பதை நிரூபித்துள்ளோம்” என கூறியுள்ளனர்.
Advertisement: