நடிகர் வடிவேலுவின் படங்கள் தற்போது வரவில்லை, ஆனால் ஸ்டாலின் நடிக்கும் படம் தினந்தோறும் வருகிறது என அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார்.
மதுரை சந்தைப்பேட்டையில், ஜெயலலிதாவின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவது குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், அதிமுக ஆட்சியில் ரவுடிசம் கட்டப்பஞ்சாயத்து என ஏதாவது குறைகூற முடியுமா?எடப்பாடியார் ஆட்சியை மீண்டும் கொண்டு வர மக்கள் ஒரு முகமாக முடிவெடுத்து விட்டனர்.
எதிர்க்கட்சிகள் வீசும் பந்துகளை எல்லாம் முதலமைச்சர் சிக்சர்களாக அடிக்கிறார். ஆனால், ஸ்டாலின் வீசும் பந்து அனைத்தும் நோ பால் ஆகிவிடுகிறது எனவும் கூறினார். அதைத்தொடர்ந்து பேசிய அவர், அதிகாரிகளின் ஆலோசனைப் படியே வைகை ஆற்றில் தெர்மாக்கோல் விட்டேன். அதன் மூலம் உலகம் முழுவதும் பிரபலமாகி விட்டேன் எனவும் நகைச்சுவையாக பேசினார்.
Advertisement: