செய்திகள் தமிழகம் தேர்தல் 2021 முக்கியச் செய்திகள்

குடிநீர் இணைப்பு வழங்கும் பணிகள் விரைவில் முடிவடையும்: செல்லூர் ராஜூ

மதுரை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இலவச குடிநீர் இணைப்பு வழங்கும் பணிகள் விரைவில் முடிவடையும் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.

மதுரை மேற்கு தொகுதியில் அதிமுக சார்பில் அமைச்சர் செல்லூர் ராஜூ போட்டியிடுகிறார். இந்நிலையில், மதுரை மேற்கு தொகுதிக்குட்பட்ட கரிசல்குளம், கூடல்நகர், கூடல்புதூர், விளாங்குடி உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பரப்புரையில் அவர் ஈடுபட்டார்.

அப்போது, அமைச்சருக்கு அப்பகுதி மக்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் பொதுமக்களிடையே பேசிய அவர், தன்னை இரண்டு முறை தேர்வு செய்த மதுரை மக்களுக்கு தடையின்றி தண்ணீர் வழங்க முல்லைப் பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டத்தை கொண்டு வந்ததாக அவர் கூறினார்.

Advertisement:

Related posts

புயல் நிவாரணம் வழங்ககோரி போராடியவர்கள் மீதுள்ள வழக்குகள் தளுப்படிசெய்யப்படும் – ஸ்டாலின் உறுதி

Gayathri Venkatesan

புதுச்சேரியில் பாமக தனித்துப் போட்டி!

Karthick

தபால் ஓட்டுக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்!

Gayathri Venkatesan