குற்றம்

ஆஸ்திரேலியாவுக்கு கடத்த முயன்ற போதை பொருட்கள் பறிமுதல்..

சென்னையில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு கடத்த முயன்ற சுமார் இரண்டரை கோடி மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் ஆஸ்திரேலியாவுக்கு போதைப்பொருள் கடத்தப்படுவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவதற்காக பார்சல் செய்து வைக்கப்பட்டிருந்த சரக்குகளை சுங்க அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது, சிங்கப்பூர் வழியாக ஆஸ்திரேலியாவுக்கு அனுப்புவதற்காக இருந்த பார்சலில் இரண்டரை கோடி மதிப்பிலான சூடோபீட்ரின் எனும் போதை பவுடர் இருப்பது தெரிய வந்தது. அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள், இதுதொடர்பாக ஒருவரை கைது செய்தனர்.

Advertisement:

Related posts

தட்டச்சு பயிற்சி மையத்தை சூறையாடிய மர்ம நபர்கள்!

Niruban Chakkaaravarthi

13 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்த கொடூர தந்தை போக்சோ சட்டத்தில் கைது

Jeba

துக்க வீட்டில் இளம்பெண் பகீர் குற்றச்சாட்டு… விழி பிதுங்கிய போலீசார்!

Niruban Chakkaaravarthi

Leave a Comment