தேர்தல் 2021 முக்கியச் செய்திகள்

“மன்னராட்சி காலத்திலும் ஜனநாயகம் காத்தவர்கள் தமிழர்கள்” – சீமான் பெருமிதம்

காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகளால் தான், பாஜக ஆட்சிக்கு வந்ததாக புதுச்சேரி வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.

தமிழகம், புதுவை, கேரளா உள்ளிட்ட 3 மாநிலங்களில் வரும் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தலில் களம்காணும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்களை ஒரே மேடையில் சில நாட்களுக்கு முன் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகம் செய்து வைத்தார்.

இந்நிலையில், புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின், வேட்பாளர்கள் 14 பெண் வேட்பாளர்கள் மற்றும் 14 ஆண் வேட்பாளர்கள் என 28 பேரை அக்கட்சியின் ஒருங்கிணைபாளர் சீமான் ஒரே மேடையில் அறிமுகப்படுத்தினார். பின்னர் பேசிய அவர், காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகளால்தான் பாஜக ஆட்சிக்கு வந்ததாக தெரிவித்த அவர், மன்னராட்சி காலத்திலும் ஜனநாயகம் காத்தவர்கள் தமிழர்கள் என பெருமிதம் கொள்வோம் என தெரிவித்தார்.

Advertisement:

Related posts

2-வது கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரதமர்!

L.Renuga Devi

அண்ணா பல்கலைக்கழகத்தில் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு!

Jayapriya

சிபிஎஸ்இ தேர்வு குறித்த பிரதமர் மோடியின் முடிவுக்கு காங்கிரஸ் வரவேற்பு!

Gayathri Venkatesan