செய்திகள் தமிழகம் தேர்தல் 2021 முக்கியச் செய்திகள்

இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க வேண்டும்” : சீமான்

தான் வாக்கு கேட்கவில்லை என்றும் வருங்கால சந்ததியினரின் வாழ்க்கையை கேட்பதாகவும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

திருவொற்றியூரில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இறுதிக்கட்ட பரப்புரையில் ஈடுபட்டார். திருவொற்றியூர் தொகுதிக்குட்பட்ட தேரடி பூந்தோட்டை பள்ளி வளாகத்தில், நடைபயிற்சி சென்றவர்களிடம் பூப்பந்து விளையாடியபடி, சீமான் வாக்கு சேகரித்தார். இதையடுத்து, திருவொற்றியூர் பேருந்து நிலையம் முதல் காலடிபேட்டை வரை, நாம் தமிழர் கட்சியினர் பேரணி சென்றனர்.

இதை தொடர்ந்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய சீமான், இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க வேண்டும், என கேட்டுக் கொண்டார். விவசாயத்தை செழுமையாக்கவும், விவசாயிகளுக்கு ஆதரவாகவும் பல திட்டங்கள் வைத்திருப்பதாகவும், அவர் கூறினார்.

Advertisement:

Related posts

“தமிழகத்தில் அதிமுக ஆட்சியே தொடர வேண்டும் என மக்கள் முடிவெடுத்து விட்டார்கள்” :ஜி.கே.வாசன்

Karthick

குடிபோதையில், தன் வீட்டையே தீ வைத்து கொளுத்திய காவலர்!

Jayapriya

”புத்தாண்டு அன்று அதிவேகமாக வாகனம் ஓட்டினால் கைது நடவடிக்கை”- சென்னை பெருநகர காவல்துறை!

Jayapriya